ஆடி அமாவாசை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நிலக்கோட்டை அடுத்துள்ள அணைப்பட்டி ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நிலக்கோட்டை அடுத்துள்ள அணைப்பட்டி ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பேரணை வைகையாற்றின் கரையில் பழமையான அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசித்தனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். 
வைகையாற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் புனித நீராட முடியாமல் அதிருப்தி அடைந்தனர். 
ஆத்தூர் ஸ்ரீசடையாண்டி கோயில்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஸ்ரீசடையாண்டி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பொங்கல் வைத்தும், கிடா மற்றும் சேவல்கள் பலியிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த விழாவில் அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்: சின்னாளபட்டி மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com