முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கஞ்சா விற்பனை: முதியவர் உள்பட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
By DIN | Published On : 04th August 2019 03:52 AM | Last Updated : 04th August 2019 03:52 AM | அ+அ அ- |

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உள்ளிட்ட இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொ.முத்தன் (63). கஞ்சா விற்பனை செய்து வந்த முத்தன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஜூலை 12 ஆம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்தனை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள அம்மாபட்டி கொட்டாரப்பட்டியைச் சேர்ந்த பொ.காட்டுராஜா(49) என்பவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் பிடிபட்டார். இந்நிலையில், முத்தன் மற்றும் காட்டுராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் காண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்துள்ளார். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளார்.