முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் அருகே காபி சந்தைக்கான கட்டச்சங்கிலி செயலி அறிமுகம்
By DIN | Published On : 04th August 2019 03:55 AM | Last Updated : 04th August 2019 03:55 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் காபி வாரியம் சார்பில் கட்டச்சங்கிலி முறையில் காபி சந்தைகள் அமைக்கும் செயலி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செயலியை காபி வாரிய இணை இயக்குநர் திம்மராஜூ தொடக்கி வைத்துப் பேசியது:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை காபி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளும் தங்களிடம் உள்ள செல்லிடப்பேசியில் கட்டச் சங்கிலி செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, அன்றாடம் சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் காபி விலையை அறிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்து கொள்வதற்காக இச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தாண்டிக்குடியிலுள்ள காபி ஆராய்ச்சி நிலையத்திலுள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.
இதில் தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குநர் பாபு மற்றும் பண்ணைக்காடு, தாண்டிக்குடி,கே.சி.பட்டி, மங்களம் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காபி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக துணை இயக்குனர் நிர்மல்டேவிஸ் வரவேற்றார். காபிவாரிய அலுவலர் சக்தி நன்றி கூறினார்.