முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
வத்தலகுண்டு அருகே துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
By DIN | Published On : 04th August 2019 03:54 AM | Last Updated : 04th August 2019 03:54 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் 146 துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம், விருவீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேதா தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் (வ.ஊ) கிருபாகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சின்னன், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.