ஆட்சிமொழி செயலாக்கத்தை 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழி செயலாக்கம் அடுத்த ஆண்டு 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி உறுதி அளித்தார்.


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழி செயலாக்கம் அடுத்த ஆண்டு 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி உறுதி அளித்தார்.
   திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய திண்டுக்கல் மாவட்ட பால்வளத்துறை துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழும், 2017-ம் ஆண்டில் தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதில் சிறப்பாக செயல்பட்ட அரசு பணியாளர்களுக்கு பணப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் மு.விஜயலட்சுமி வழங்கினார்.  
முன்னதாக  ஆட்சியர் விஜயலட்சுமி பேசியது: அரசு அலுவலங்களில் அலுவலர்கள் எழுதும் குறிப்புகள் மற்றும் வரைவுகள் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும்.  தாய் மொழியான தமிழ் மொழியை பிற மொழி கலப்பின்றி பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும். மொழிகளில் முதன்மை மொழியான தமிழை குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பிழையின்றி பேசுவதற்கு  கற்றுத்தர வேண்டும். தற்போது தமிழ் வழியில் கல்வி கற்கின்ற வகையில் பொறியியல்  மற்றும் பிறதுறைகளின் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  தமிழ் வழியில் கற்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். 
 திண்டுக்கல் மாவட்டத்தில், தற்போது வருவாய்த்துறை மற்றும் பிறத்துறை அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம்  90 சதவீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்தாண்டு 100 சதவீதம் செயலாக்குவதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் சார்பில் உறுதியளிக்கிறேன் என்றார்.
  நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன், அகரமுதலி திட்ட  முன்னாள் இயக்குநர் கோ.செழியன், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பெ.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com