திண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இத்திருவிழாவையொட்டி, கடந்த 28 ஆம் தேதி நவநாள்கள் திருப்பலி தொடங்கியது. அதில், முக்கிய திருப்பலியாக குணமளிக்கும் வழிபாடு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், செபஸ்தியார் ஆலய கொடிமரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில், புனித செபஸ்தியாரின் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. 
திங்கள்கிழமை இரவு புனிதர்களின் மின் தேர் பவனி, வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி. தாமஸ் பால்சாமி தலைமையில், மறைமாவட்ட குருக்கள் மூலம் திருவிழா திருப்பலி ஆகஸ்ட் 6 ஆம் தேதி  நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, புனிதரின் மன்றாட்டு செபம், வேண்டுதல் பூஜை ஆகியன நடைபெறுகின்றன. 
பின்னர்,  புனிதருக்கு காணிக்கையாக, ஆடு, கோழி, அரிசி உள்ளிட்ட பொருள்களை காணிக்கையாகச் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை அன்னதானம் நடத்துவதற்கும் விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
புனித சலேத் அன்னை  
ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்: கொடைக்கானலில் உள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தின் 153-ஆவது ஆண்டு  திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து புனித சலேத் அன்னையின் உருவம் தாங்கிய கொடி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 
இந்த ஊர்வலமானது, காமராஜர்சாலை, மூஞ்சிக்கல், கே.சி.எஸ்.திடல், அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதி, கோக்கர்ஸ் வாக் சாலை, பூங்கா சாலை, செயின்ட் மேரீஸ் சாலை வழியாக புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது.
இதைத் தொடர்ந்து,  மறையுரை மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து, புனித சலேத் மாதாவின் கொடி மந்திரிக்கப்பட்டு, பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ் கொடியேற்றி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com