சுடச்சுட

  

  அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியம்: 8,981 பெண்களுக்கு வாய்ப்பு

  By DIN  |   Published on : 14th August 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8,981 பெண் பயனாளிகளுக்கு அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன.
   இதுதொடர்பாக மண்டல கால்நடை இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளது: இத்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 500 வீதம் 7000 பெண் பயனாளிகள், 23 பேரூராட்சிகளிலிருந்து 1,891 பெண் பயனாளிகள் என மொத்தம் 8,981 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் ரக கோழிக் குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.  
   பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ள இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தால் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு எண் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு மற்றும் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள், இத்திட்டத்தில் சேர இயலாது. விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30 சதவீதம் பேர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். பேரூராட்சிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் பயனாளிகளும் தேர்வு செய்யப்படுவர். 
   தகுதியான ஏழைப் பெண் பயனாளிகள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் வரும்  25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai