சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரத்தில் விபத்தைத் தடுக்க சாலை மைய தடுப்புச் சுவர் மீது கம்பி வேலி அமைப்பு

    By DIN  |   Published on : 14th August 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சாலை மைய தடுப்புச்சுவரில் கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
     ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழனி-திண்டுக்கல் சாலை மற்றும் தாராபுரம் சாலையில் சாலையின் மைப்பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. 
    இந்த நிலையில் தடுப்புச் சுவர் மீது சிலர் ஏறி, மறுபகுதிக்குச் செல்வதால், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மோதி உயிரிழப்பு  ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரித்து, அதன் மேல் பகுதியில் இரும்பு கம்பியால் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமை ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் ஆங்காங்கே கம்பி பதிக்கும் வகையில் இடிக்கும் பணியில் தொழிலாளர்கள்  ஈடுபட்டனர்.
             இதனால் வாகன விபத்துக்கள் குறையும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai