சுடச்சுட

  

  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மாலைய கவுண்டன்பட்டியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு சென்னப்பன் எனப்படும் கோயில் திருவிழா கடந்த 3 நாள்கள் நடைபெற்றது. 
    இத்திருவிழாவில் பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்தும் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் கோயில் திருவிழா வழிபாட்டுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கிச் செல்லும் வழக்கமும் உள்ளது. இத்திருவிழாவில்  பொட்டிகுளம், மாலையகவுண்டன்பட்டி, உச்சணம்பட்டி போன்ற ஊர்பொது மக்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai