சுடச்சுட

  

  பழனி மலைக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கக் கோபுரம், படிப்பாதைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வருவாயில் முதலிடம் வகிக்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பழனி மலைக்கோயிலின் படிவழிப்பாதை மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் சந்தேகத்துக்கு இடமான பக்தர்களின் உடைமைகளை திருக்கோயில் பணியாளர்கள், போலீஸார் பரிசோதித்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனர். மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்கவிமானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய போலீஸாரும், கோயில் பாதுகாவலர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 
   பழனி கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில்நிலையம், அடிவாரம் கிரிவீதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போலீஸார் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  மலைக்கோயில் முதல் ரயில் நிலையம், பேருந்து நிலையம் வரை வழிநெடுக கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டு பழனி நகர காவல் நிலைய கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai