ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத திருவிழா

நத்தம் அருகே  ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதமாக திருவிழா நடைபெற்றது.

நத்தம் அருகே  ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதமாக திருவிழா நடைபெற்றது.
 திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள பாத சிறுகுடியில் பிரசித்திப் பெற்ற பொன்னர் சங்கர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஆடி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்று ஆடு, கோழி பலியிட்டு படையல் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். திருவிழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதல், பாத சிறுகுடி பகுதியைச் சேர்ந்த பெண்கள், இந்த கோயிலுக்கு செல்வதில்லை. அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. புனித தீர்த்தம் கொண்டுவந்து வைத்தபின், பொன்னர் சங்கர் கோயிலில்  பொங்கல் வைத்து, கிடாய் பலியிடப்பட்டது. பின்னர், நேர்த்திக் கடனாக பக்தர்களின் ஆடுகள் பலியிடப்பட்டன. பலியிடப்பட்ட ஆடுகளை தோல் உறிக்காமல், பனை ஓலை தீயில் கருக்கி, மஞ்சள் தடவி சமைக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு படைக்கப்பட்ட பின், பெரியக்காள், மகாமுனி, பொன்னர் சங்கர் ஆகிய தெய்வங்களை நோக்கி எரி சோறு வீசப்பட்டது. பொன்னர் சங்கருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.அதன் பின் ஆண் பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com