கண்மாயை தூர்வார ஏற்பட்ட போட்டியில் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா குல்லலகுண்டு ஊராட்சிக்குள்பட்ட தெப்பங்குளம் கண்மாயை தூர்வாருவதில், 2 சங்கங்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா குல்லலகுண்டு ஊராட்சிக்குள்பட்ட தெப்பங்குளம் கண்மாயை தூர்வாருவதில், 2 சங்கங்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது.
தெப்பங்குளம் கண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயை தூர்வாருவதற்காக, தமிழக அரசு ரூ. 65 லட்சம் ஒதுக்கீடு செய்து,   பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்கம் மற்றும் மற்றொரு சங்கம் ஆகிய இரு சங்கங்களுக்கிடையே தூர்வாருவதில் போட்டி ஏற்பட்டது. இதனால், ஜூலை மாதம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்து, ஒரு விவசாய சங்கத் தலைவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அதையடுத்து, உயர் நீதிமன்ற   உத்தரவுப்படி, திங்கள்கிழமை இந்த கண்மாய் எந்த விவசாய சங்கத்தின் கீழ் தூர்வார வேண்டும் என தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்றது.
இதற்காக, திங்கள்கிழமை ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வட்டாட்சியர் மற்றும் மாவட்டப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில், குல்லலகுண்டு சமுதாயக் கூடத்தில் தேர்தல் நடைபெற்றது.
அதில், தெப்பங்குளம் கண்மாய் பாசன நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் பட்டாதாரர்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில், 149 வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடைபெற்ற உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவரை அறிவித்து சான்று வழங்கப்பட்டது. முடிவில்,  தெப்பங்குளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த மாலையாகவுண்டன்பட்டி ஜான் இன்னாச்சி 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு சங்கத்தைச் சேர்ந்த பரமசிவம் 25 வாக்குகள் பெற்று தோல்வியடைந்ததார். 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com