சுடச்சுட

  

  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. 
   இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளது:
   அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)  தலைமையில் முற்பகல் 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாவதப் பொருள்கள் தவிர, நெகிழி, குடிநீர், கொசு ஒழிப்பு, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், நீர் மேலாண்மை இயக்கம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபையில் தவறாமல் பங்கேற்று கருத்து தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai