சுடச்சுட

  

  திண்டுக்கல் மாவட்ட  தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பாக,  திண்டுக்கல் வட்டார அளவில் பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நிலக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.   
   இக்கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் (கி.ஊ) தலைமை வகித்தார். 
   வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) லாரன்ஸ் விளக்க உரையாற்றினார். மேலாளர் முருகேசன் இன்றைய கிராமப்புற சுகாதாரம் குறித்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வினோத் கலந்து கொண்டு, சுகாதாரம் தொடர்பாக கிராமப்புறங்களில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கிக் கூறினார். 
    இக்கூட்டத்தில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சி மன்ற செயலர்கள், 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள், கிராம செவிலிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் நிலக்கோட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai