சுடச்சுட

  

  நிலக்கோட்டையில் கழிவுநீர்க் குட்டை கண்டுகொள்ளாத பேரூராட்சி

  By DIN  |   Published on : 15th August 2019 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிலக்கோட்டையில் காவல்நிலையம் அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நோய் பரப்புவதை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
     திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை ஒரே இடத்தில் உள்ளன. இதன் எதிரே சாக்கடை கழிவு நீர் குளம்போல் தேங்கியுள்ளது. 
       பல மாதங்களாக கழிவு நீர் தேங்கிக்கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.  மேலும் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த வழியாக, கல்லூரி, பள்ளிகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
    மேலும் காவல் நிலையத்திற்கு வருவோர் மரத்தடியில் காத்திருக்கும்போது கொசுக்கடியாலும் துர்நாற்றத்தாலும் அவதிப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். 
   இதுகுறித்து பலமுறை நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பகுதியில் பல மாதங்களாக குளமாக தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai