Enable Javscript for better performance
பழனி வரதமாநதி அணையில் ஆபத்தான பகுதியில் இளைஞர்கள் குளியல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பழனி வரதமாநதி அணையில் ஆபத்தான பகுதியில் இளைஞர்கள் குளியல்

    By DIN  |   Published On : 19th August 2019 08:22 AM  |   Last Updated : 19th August 2019 08:22 AM  |  அ+அ அ-  |  

    பழனியை அடுத்த வரதமாநதி அணைக்கட்டில் தடையை மீறி ஆபத்தான இடங்களில் இறங்கி இளைஞர்கள் குளித்து வருவது விபத்தை வரவழைப்பதாக உள்ளது.
    பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் வரதமாநதி அணைக்கட்டு, பாலாறு-பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகள் உள்ளன. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணைகளுக்கு உடனடியாக வந்து சேர்வதால், இந்த அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பது வழக்கம். 
    இதில், வரதமாநதி அணை தடுப்பணை போன்று கட்டப்பட்டுள்ளது. கன மழை பெய்தாலே இந்த அணை நிரம்பிவிடுவது வழக்கம். இந்த அணையில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, அளவுக்கதிமான நீர் வழிந்தோடும் வகையில் அணை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பாசனத்துக்கு திறந்துவிட மதகுகளும் உள்ளன.
    இந்த அணையில், தற்போது பாசனத்துக்கும், குடிநீருக்கும் சிறிதளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அணையின் உள்பகுதியில் இறங்கிய இளைஞர்கள்,  தண்ணீர் வரும் மதகுப் பாதையில் அமர்ந்து அபாயகரமான குளியலில் ஈடுபட்டனர். மேலும், மதகுநீர் வெளியே வரும் பாதையினுள்ளே சென்றும் வந்தனர். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களை தட்டிக்கேட்க அங்கு காவலாளிகளும் இல்லாத நிலை உள்ளது. 
    எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் வரதமா நதி அணைக்கு போதிய பணியாளர்களை நியமித்து, ஆபத்தான பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாத வகையில் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp