Enable Javscript for better performance
மதுரையில் விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு காவல் துறை நண்பர்கள் ரூ.3.56 லட்சம் நிதி உதவி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரையில் விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு  காவல் துறை நண்பர்கள் ரூ.3.56 லட்சம் நிதி உதவி

    By DIN  |   Published On : 19th August 2019 08:20 AM  |   Last Updated : 19th August 2019 08:20 AM  |  அ+அ அ-  |  

    பழனி சிறப்புக் காவல் படையில் ஒன்றாகப் பயிற்சி பெற்ற காவலர்களில் ஒருவர் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து,  காவல் துறை நண்பர்கள் திரட்டிய ரூ.3.56 லட்சம் நிதியை அவரது குடும்பத்துக்கு சனிக்கிழமை வழங்கினர். 
    மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த சிவக்குமார் (46), கீரைத் துறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 10 ஆம் வகுப்பு படிக்கும் சுவாதி (15) என்ற மகளும், 6 ஆம் வகுப்பு படிக்கும் கிஷோர்குமார் (11) என்ற மகனும் உள்ளனர்.
    இந்நிலையில், சிவக்குமார் கடந்த ஜூலை 9 ஆம் தேதி தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாமியாருடன் திருப்புவனம் நான்குவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.  அப்போது, ராமேசுவரத்திலிருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில், மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவக்குமார் பலத்த காயங்களுடன் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  
    சிவக்குமார், கடந்த 1997 ஆம் ஆண்டு காவலருக்காக தேர்வாகி, பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 14 ஆம் அணியில் முதல் குழுவில் (முதல் பேட்ஜ்)  காவலருக்கான பயிற்சி பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து, நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெற்றுள்ளனர். இவருடன் பயிற்சி பெற்ற நண்பர்கள் பலரும் தற்போது சார்பு-ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட நிலைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பழனி முத்துக்கள் என்ற பெயரில் கட்செவி அஞ்சல் குழு உருவாக்கி, அதன்மூலம் தங்களது குடும்ப நிகழ்வுகளை பகிர்ந்து வந்துள்ளனர்.
    இதில், காவலர் சிவக்குமாருக்கு நேர்ந்த விபத்து குறித்தும் பகிரப்பட்டுள்ளது. சிவக்குமார் மனைவி வேலைக்குச் செல்லாமல் மகன், மகளை கவனித்து வந்த நிலையில், நண்பர்கள் அவரது மருத்துவ செலவுக்காக நிதி திரட்ட முடிவு செய்தனர். அதன்படி, குறுகிய காலத்தில் சுமார் ரூ.3.56 லட்சம் சேர்ந்துள்ளது.
    இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி சிவக்குமார் இறந்துவிட்டார். இது நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவரது மருத்துவச் செலவுக்காக திரட்டப்பட்ட நிதியான ரூ.3.56 லட்சத்தை, அவரது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு வழங்க முடிவு செய்தனர்.
    அதையடுத்து கடந்த சனிக்கிழமை, மதுரை, சிவகங்கை மற்றும் தேனி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட காவல் துறை நண்பர்கள் ரூ.3.56 லட்சம் நிதியை, 
    சிவக்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி சங்கீதாவிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp