Enable Javscript for better performance
காந்தி கிராம பல்கலை.யில் நாட்டுப் புறவியல் தினம்- Dinamani

சுடச்சுட

    

    காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் தமிழ்த்துறை சார்பில் உலக நாட்டுப்புறவியல் தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. 
    நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தர் (பொ) எம்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
    விழாவில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர், தான் தொகுத்து வைத்திருந்த 50ஆயிரம் பழமொழிகளை பல்கலை. ஆவண காப்பகத்திற்கு வழங்கினார். முன்னதாக கலைமாமணி முத்துலட்சுமணராவின் தோல்பாவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது. 
    நிகழ்ச்சியில் தமிழ் இந்திய மொழிகள் புலத் தலைவர் பா.ஆனந்தகுமார், தமிழ்த்துறை பேராசிரியரும், யுஜிசி சிறப்பு ஆய்வு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai