Enable Javscript for better performance
நத்தம் பகுதியில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பின், திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டுமே அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் சம வெளிப் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு வந்தாலும், ஒரு சில இடங்களில் சாரல் மழையுடன் கலைந்துவிடுகின்றன. இதனால், கோடை உழவு செய்துள்ள விவசாயிகள் ஆடிப் பட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விதைப்பு பணிகளை தொடங்கவில்லை. 
     இந்நிலையில், மாவட்டத்தின் கிழக்கு பகுதியான நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை 1 மணி நேரத்திற்கும் கூடுதலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை, விதைப்பு பணிகளுக்காக காத்திருந்த விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல் பகுதியில் சாரல்: அதேபோல், திண்டுக்கல் நகர் பகுதியிலும் சுமார் 10 நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. கிருஷ்ண ஜயந்தி நாளில், ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை இல்லாவிட்டாலும், திண்டுக்கல்லில் சாரல் மழை பெய்வது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியை அடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai