திண்டுக்கல் மாவட்டத்தில் கோகுலாஷ்டமி வழிபாடு

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப்  பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப்  பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 கோயில் வளாகத்திலுள்ள சுவாமி கண்ணனுக்கு பால், தயிர், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மகா அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் சிறப்பு அலங்கார ஆராதணை நடைபெற்றது. மேலும், ஆழ்வார்களின் பாசுரங்கள் பாராயணம் செய்யப்ட்டன. அதனைத் தொடர்ந்து, மாலை 7 மணிக்கு உறியடித் திருவிழா நடைபெற்றது. 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணனை வழிபட்டனர்.
பழனி : பழனியில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதா, கிருஷ்ணர் வேடம் அணிந்து பங்கேற்றனர். அடிவாரம் பாத விநாயகர் கோயில் முன்பாக குழந்தைகள் ஊர்வலம் தொடங்கியது.  ஊர்வலத்தை மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் தொடக்கி வைத்தார்.  பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கனகராஜ், அரிமா சுப்புராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்.எஸ்.எஸ் மதுரை மண்டல தலைவர் அம்பி என்ற ராமகிருஷ்ணன், விஹெச்பி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  ஊர்வலம் சன்னிதி வீதி, பாளையம், பேருந்து நிலையம் வழியாக சென்று வேணுகோபால சுவாமிகள் கோயிலில் நிறைவடைந்தது.  நிகழ்ச்சியில் சிறப்பாக வேடமணிந்த குழந்தைகளுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.   
மேலும் பழனி வேணுகோபால சுவாமி கோயில், இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளிட்ட  கோயில்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.  இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் எஸ்பிஎம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாட்டு மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. பள்ளித் தாளாளர் ஆர்விகே ரத்தினம் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் கே.ஆர் சபரி ஹிதர் முன்னிலை வகித்தார். பள்ளி இணைச் செயலர் சத்யா ஹிதர் நடுவராக விளங்கினார். பள்ளி முதல்வர் கணேசமூர்த்தி கிருஷ்ணரின் அவதாரங்கள் பற்றி பேசினார். பள்ளி துணை முதல்வர் கல்பனா பிரதீப் கிருஷ்ண ஜயந்தியை பற்றி விளக்கினார். முன்னதாக ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஸ்டான்லி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com