ஒட்டன்சத்திரத்தில் நாளை முதல் ஆக.30 வரை சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை அந்தந்த கிராம ஊராட்சி அலுவலங்களில் நடைபெறுகிறது.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை அந்தந்த கிராம ஊராட்சி அலுவலங்களில் நடைபெறுகிறது.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திங்கள்கிழமை அம்பிளிக்கை ஊராட்சியில் பழனி சார்-ஆட்சியர் உமா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சிந்தலப்பட்டி, காப்பிலியபட்டி ஊராட்சியில் ஒட்டன்சத்திரம் மண்டல துணை வட்டாட்சியர் இரா.ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்மோகன், உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு நீர் நிலைகளில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் நீராதாரங்களை பெருக்குவது குறித்து மனு அளிக்கலாம்.
அதேபோல அன்றைய தினம் அத்தப்பம்பட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, குத்திலுப்பை, ஓடைப்பட்டி, ஜ.வாடிப்பட்டி, நவக்கானி, மண்டவாடி, கொ.கீரனூர் ஆகிய கிராமங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. 
அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 27-இல் கொத்தயம், பொருளூர், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, பொட்டிக்காம்பட்டி, சிக்கமநாயக்கன்பட்டி, தேவத்தூர், 16.புதூர் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. 
ஆகஸ்ட் 28-ஆம் தேதி அப்பனூத்து,புங்கமுத்தூர், அப்பிபாளையம், கள்ளிமந்தையம், கூத்தம்பூண்டி, கரியாம்பட்டி, அப்பியம்பட்டி, பாலப்பன்பட்டி, பருத்தியூர், பூசாரிபட்டி ஆகிய கிராமங்களிலும், ஆக.29-இல்  பெரியகோட்டை, ரெட்டியபட்டி, வீரலப்பட்டி, விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சிந்தலவாடம்பட்டி, சத்திரப்பட்டி, தாசரிபட்டி,புதுக்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, கொல்லபட்டி, வடகாடு மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 முதல் 18 வார்டு வரையும் நடைபெறுகிறது. 
ஆக 30-ஆம் தேதி இடையகோட்டை, இ.கல்லுப்பட்டி, ஜோகிபட்டி, புளியமரத்துக்கோட்டை, வலையபட்டி, ஜவ்வாதுபட்டி, வெரியப்பூர், கேதையுறும்பு,புலியூர்நத்தம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. 
இந்த முகாம்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் என்.கே.சரவணன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com