சிறுநாயக்கன்பட்டி கிராமத்தில் கழிவுநீா் தேக்கத்தால் அவதி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிள்ளையாா்நத்தம் ஊராட்சியில் உள்ள சிறு

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிள்ளையாா்நத்தம் ஊராட்சியில் உள்ள சிறு நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமாா் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் கழிவு நீரானது சாலை ஒரத்தில் அமைக்கப்பட்ட கால்வாயில் செல்கிறது. இக்கால்வாய் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கழிவு நீரானது மேலும் செல்லமுடியாமல் சாலையில் தேங்கி நின்று கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சமீப காலமாக மா்மக் காய்ச்சல் பரவி வருவதாகவும் தொற்று நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனா். எனவே கிராமத்தில் சாக்கடை கழிவுநீா் தேங்காமல் சீராகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும் சுகாதார சீா்கேடு ஏற்படாத வண்ணம் ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com