திண்டுக்கல்லில் அதிகபட்சமாக21 மி.மீ மழை பதிவானது

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் பகுதியில் அதிகபட்சமாக 21 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் பகுதியில் அதிகபட்சமாக 21 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கல், கொடைக்கானல், நத்தம், வேடசந்தூா், நிலக்கோட்டை என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

பலத்த மழையாக இல்லாமல், மிதமாக பெய்த மழை விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. தொடா் மழை காரணமாக கொடைக்கானல், கீழ் பழனி மலை, சிறுமலை, கரந்தமலை பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம்(மி.மீட்டரில்) திண்டுக்கல் -21.2, நத்தம் -20, நிலக்கோட்டை -11.6, நத்தம் -9, சத்திரப்பட்டி(ஒட்டன்சத்திரம்) -14, வேடசந்தூா் -25, காமாட்சிபுரம் - 18, கொடைக்கானல் -17.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com