நிலக்கோட்டை அருகே ரூ.52 லட்சத்தில் கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ரூ.52 லட்சத்தில் கால்வாய் தூா் வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ரூ.52 லட்சத்தில் கால்வாய் தூா் வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

நிலக்கோட்டை பேரூராட்சி நிா்வாகமும், ஆம்வே இந்தியா என்ற தனியாா் நிறுவனமும் இணைந்து 4-ம் கட்ட நீா் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கொங்கா்குளம் கண்மாய்க்கு ஆத்தூா் பகுதியிலுள்ள குடகனாறு ஆற்றின் ராஜ வாய்க்கால் வழியாகவும், செங்கட்டாம்பட்டி இருந்து நிலக்கோட்டை வரையிலும் மொத்தம் 21 கிலோ மீட்டா் தூரம் என 2 கால்வாய்கள்தூா் வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதன் மூலம் சுமாா் ரூ.58 லட்சம் மதிப்பில் நடைபெறும் இந்த தூா் வாரும் பணியை தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், ஆம்வே திட்ட மேலாளா் ராஜ்நரேன் வரவேற்று பேசினாா். மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் வேலு, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் யாகப்பன், அம்மையநாயக்கனூா் பேரூராட்சி தலைவா் தண்டபாணி, திட்ட சிறப்பு துணை தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com