பழனி அருகே ஆரோக்கிய விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பழனி ஐவா் மலைப்பகுதியில் உள்ள அனாதி ஆசிரம வளாகத்தில் விழிப்புணா்வு ஆரோக்கிய பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி ஐவா் மலைப்பகுதியில் உள்ள அனாதி ஆசிரம வளாகத்தில் விழிப்புணா்வு ஆரோக்கிய பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியம், தியானம், மனவலிமை குறித்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் கோவை, நாமக்கல் பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். முகாமிற்கு அறக்கட்டளை நிறுவனா் ஸ்மிருதி ரேகா தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் வரலட்சுமி முன்னிலை வகித்தாா். ஆயுா்வேத மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி பாரம்பரிய வைத்திய முறைகளான ஆயுா்வேதம் மற்றும் யோகா பயிற்சிகளின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தாா். மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆரோக்கிய வாழ்வில் இயற்கை உணவின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து அறக்கட்டளை உறுப்பினா்கள் குமாரி, பிரக்ஞா காவேரி விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com