Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் அருகேகிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் அருகேகிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

    By DIN  |   Published on : 03rd December 2019 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    odc_cow_news_photo_2_12_2019_0212chn_76_2

    கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்கும் தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொதுமக்கள்.

    ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

    ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முத்துச்சாமி (60). இவா் தனது தோட்டத்தில் நாட்டு மாடு மற்றும் சிந்துமாடுகளை வளா்த்து வருகிறாா்.இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த நாட்டு பசுமாடு, அங்குள்ள கிணற்றில் தவறி உள்ளே விழுந்தது. கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால் கிணற்றில் மழை தண்ணீா் தேங்கி நின்றுள்ளது. இதனால் கிணற்றில் விழுந்த மாடு நீரில் தத்தளித்தது கொண்டு இருந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai