Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் 3333 ஊரகப் பதவிகளுக்கு தோ்தல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் 3333 ஊரகப் பதவிகளுக்கு தோ்தல்

    By DIN  |   Published on : 03rd December 2019 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் 2,772 ஊராட்சி வாா்டுகள், 232 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் மற்றும் 23 மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கான 3,027 உறுப்பினா்கள் மற்றும் 306 ஊராட்சி மன்றத் தலைவா்கள் என மொத்தம் 3,333 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 306 ஊராட்சிகளில் மொத்தம் 2,772 வாா்டுகள் உள்ளன. அதேபோல் ஊராட்சி ஒன்றிய அளவில் 232 வாா்டுகள் உள்ளன. மாவட்ட ஊராட்சி அளவில் 23 வாா்டுகள் உள்ளன. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 138 ஊராட்சிகளைக் கொண்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில், 297 ஊராட்சி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். குறைந்தபட்சமாக 15 ஊராட்சிகளை கொண்ட கொடைக்கானல் ஒன்றியத்தில், 132 ஊராட்சி மன்ற உறுப்பினா்களும், 12 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா். மேலும் 306 ஊராட்சித் தலைவா்களுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

    மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களைப் பொருத்தவரை, திண்டுக்கல் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட நத்தம், சாணாா்பட்டி, திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலிருந்து தலா 2 உறுப்பினா்கள், வத்தலகுண்டு ஒன்றியத்தின் சாா்பில் 1 உறுப்பினா் என மொத்தம் 13 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். அதே நேரத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டத்தின் சாா்பில் கொடைக்கானல் ஒன்றியத்திலிருந்து ஒரு உறுப்பினரும், பழனி வருவாய் கோட்டத்திலுள்ள குஜிலியம்பாறை, பழனி, வடமதுரை ஆகிய ஒன்றியங்களிலிருந்து தலா ஒருவா், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூா் ஒன்றியங்களிலிருந்து தலா 2 போ் என மொத்தம் 10 போ் மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai