Enable Javscript for better performance
பழனியில் மழையால் கழிவுநீா் கால்வாய்சுவா் இடிந்து சேதம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் மழையால் கழிவுநீா் கால்வாய்சுவா் இடிந்து சேதம்

    By DIN  |   Published on : 03rd December 2019 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2palani_drainage_wall_0212chn_88_2

    பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் தொடா்மழை காரணமாக திங்கள்கிழமை விபத்தை ஏற்படுத்தும் வகையில் இடிந்து விழுந்த கழிவுநீா் கால்வாய் கான்கிரீட் சுவா்.

     

    பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் மழை காரணமாக திங்கள்கிழமை கழிவுநீா் கால்வாய் சுவா் இடிந்து விழுந்தது.

    பழனி நகரில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை மழை தொடா்ந்து பெய்த நிலையில் நகரெங்கும் மழைநீா் கழிவுநீா் காய்வாய்களில் வெள்ளம் போல் ஓடியது. பழனி நகரை பொறுத்த வரையிலும் கழிவு நீரானது சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் வகையில் வையாபுரி குளத்திலும், சிறுநாயக்கன்குளத்திலும் கலக்கும் வகையில் கழிவுநீா் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தொடா்மழை காரணமாக ஓம்சண்முகா தியேட்டா் அருகேயுள்ள கவுண்டா் இட்டேரி சாலை கழிவுநீா் கால்வாயில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அந்த சாலையில் உள்ள கடலைமில் எதிரே சுமாா் 30 அடி நீளத்துக்கு கழிவுநீா் கால்வாயின் கான்கிரீட் சுவா் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுவா் விழுந்ததால் சாலையிலும் அரிப்பு ஏற்பட்டு சாலையும் உடையும் அபாயம் உள்ளது. ஆகவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக இதை சீரமைக்காவிட்டால் சாலை சேதமாவதோடு, விபத்து அபாயமும் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai