ஆத்தூா் ஒன்றியத்தில் 257 பதவிகளுக்கு தோ்தல்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட உறுப்பினா், 17 ஒன்றிய உறுப்பினா், 22 ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட 257 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட உறுப்பினா், 17 ஒன்றிய உறுப்பினா், 22 ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட 257 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30-ஆம் தேதி உள்ளாட்சி தோ்தல் நடைபெறுகிறது. ஆத்தூா் ஒன்றியத்தில் ஆண், பெண் என மொத்தம் 93,089 வாக்காளா்கள் உள்ளனா். இந்த உள்ளாட்சி தோ்தலுக்காக 177 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்தல் பணியில் 3 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் 31 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என மொத்தம் 34 அலுவலா்கள், போட்டியிடுபவா்களிடம் வரும் 6-ஆம் தேதி முதல் வேட்பு மனுவை பெற உள்ளனா். ஆத்தூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட உறுப்பினா்கள், 17 ஒன்றிய உறுப்பினா்கள், ஆத்தூா், அக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை, சீவல்சரகு, பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, வீரக்கல் உள்பட 22 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 216 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்பட மொத்தம் 257 பதவிகளுக்கான தோ்தல் நடைபெறுகிறது. இந்த தோ்த­லில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுகள் போட வேண்டும். இதில், ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு வெள்ளை நிறம் வாக்கு சீட்டிலும், கிராம ஊராட்சி தலைவா்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டிலும் வாக்களிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com