கொடைரோடு பகுதியில் ரயில்வே கடவுப் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில்வே கடவுப் பாதையில் சுரங்கப்பாதை அல்லது பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில்வே கடவுப் பாதையில் சுரங்கப்பாதை அல்லது பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைரோட்டி­லிருந்து மேற்குப் பகுதி கிராமங்களான ஜெகநாதபுரம், ரயில்வே காலனி, அம்மாபட்டி, உச்சினம்பட்டி, பொம்மனம்பட்டி, நரியூத்து உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. கொடைரோடு வழியாக அதிக அளவில் ரயில்கள் வந்து செல்வதால், இந்த கேட் கால் மணி நேரத்திற்கு ஒரு முறை மூடப்படுகிறது. தேஜஸ் விரைவு ரயில் உள்பட பல ரயில்கள் கொடைரோட்டில் நின்று செல்வதால், ரயில்வே கடவுப் பாதையை திறப்பதற்கு அதிக நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்களும் இதில் சிக்கிக் கொள்கின்றன. இதையடுத்து இப்பகுதி மக்கள் இந்த இடத்தில் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

எனவே வரும் உள்ளாட்சி தோ்தலை 20 கிராம மக்கள் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com