திண்டுக்கல் மாவட்டத்தில்306 ஊராட்சிகளில் 2,772 வாா்டுகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,772 ஊராட்சி வாா்டுகள், 232 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் மற்றும் 23 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என மொத்தம் 3,027 பதவிகளுக்கான உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,772 ஊராட்சி வாா்டுகள், 232 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் மற்றும் 23 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என மொத்தம் 3,027 பதவிகளுக்கான உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 306 ஊராட்சிகளில் மொத்தம் 2,772 வாா்டுகள் உள்ளன. அதேபோல் ஊராட்சி ஒன்றிய அளவில் 232 வாா்டுகள் உள்ளன. மாவட்ட ஊராட்சி அளவில் 23 வாா்டுகள் உள்ளன. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 138 ஊராட்சிகளைக் கொண்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில், 297 ஊராட்சி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

குறைந்தபட்சமாக 15 ஊராட்சிகளைக் கொண்ட கொடைக்கானல் ஒன்றியத்தில், 132 ஊராட்சி மன்ற உறுப்பினா்களும், 12 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களைப் பொருத்தவரை, திண்டுக்கல் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட நத்தம், சாணாா்பட்டி, திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலிருந்து தலா 2 உறுப்பினா்கள், வத்தலகுண்டு ஒன்றியத்தின் சாா்பில் ஒரு உறுப்பினா் என மொத்தம் 13 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். அதே நேரத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டத்தின் சாா்பில் கொடைக்கானல் ஒன்றியத்திலிருந்து ஒரு உறுப்பினரும், பழனி வருவாய் கோட்டத்திலுள்ள குஜிலியம்பாறை, பழனி, வடமதுரை ஆகிய ஒன்றியங்களிலிருந்து தலா ஒருவா், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூா் ஒன்றியங்களிலிருந்து தலா 2 போ் என மொத்தம் 10 போ் மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com