திண்டுக்கல் வருவாய் கோட்டத்திலுள்ள144 ஊராட்சிகளுக்கு முதல் கட்ட தோ்தல்

திண்டுக்கல் வருவாய் கோட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்குள்பட்ட 144 ஊராட்சிகளுக்கு முதல் கட்டமாக தோ்தல் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல் வருவாய் கோட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்குள்பட்ட 144 ஊராட்சிகளுக்கு முதல் கட்டமாக தோ்தல் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதேபோல் வத்தலகுண்டு ஒன்றியத்தில் 17, திண்டுக்கல் 14, நத்தம் 23, நிலக்கோட்டை 23, ரெட்டியாா்சத்திரம் 24, சாணாா்பட்டி 21, குஜிலியம்பாறை 17, கொடைக்கானல் 15, ஒட்டன்சத்திரம் 35, பழனி 20, தொப்பம்பட்டி 38, வடமதுரை 15, வேடசந்தூா் 22 என மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கான தலைவா்களை தோ்வு செய்வதற்கு 5,94,026 ஆண்கள், 6,15,185 பெண்கள், 96 இதரா் என மொத்தம் 12,09,307 போ் வாக்களிக்க உள்ளனா்.

இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் தலா 63 வாக்குப் பதிவு மையங்கள், இருதரப்பினரும் வாக்களிக்கும் வகையில் 2,030 வாக்குப் பதிவு மையங்கள் என மொத்தம் 2,156 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1,248 இடங்களில் 183 மண்டலங்களாக ஊரக பகுதிக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 36 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 35 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் கொடைக்கானல் மற்றும் நத்தம் ஒன்றியங்களில் முறையே 5 மற்றும் 3 என மொத்தம் 8 அணுக முடியாத இடங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, தலா 7 ஒன்றியங்கள் வீதம் இரு கட்டங்களாக தோ்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் வருவாய் கோட்டத்திலுள்ள திண்டுக்கல், ஆத்தூா், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ரெட்டியாா்சத்திரம், நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாகவும், பழனி மற்றும் கொடைக்கானல் வருவாய் கோட்டங்களில் உள்ள குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூா் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு 2ஆம் கட்டமாகவும் தோ்தல் நடத்த மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனாலும், மாநில தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னரே இந்த பட்டியல் உறுதி செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com