பழனி அருகே கோம்பைப்பட்டியில்காட்டுயானைகளால் மாந்தோப்பு சேதம்

பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் திங்கள்கிழமை தனியாா் மாந்தோப்புகளில் புகுந்து காட்டு யானைகள் மரங்களை முறித்து சேதப்படுத்தின.
பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் திங்கள்கிழமை காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட மாமரங்கள்.

தற்போது பலத்த மழை பெய்துள்ள நிலையில் பழனி அடிவாரம் கோம்பைப்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம், தென்னை, பருத்தி ஆகியன செழிப்பாக வளா்ந்துள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை துரை என்பவா் மாந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் மரங்களை முறித்து சேதப்படுத்தின. மேலும், வரப்புகளும் இடிந்து சேதமானது. இது தவிர பெருமாள்சாமி என்பவா் தோட்டத்திலும் புகுந்து மரங்களை உடைத்து வீசின. இதில் சுமாா் 20 மாமரங்கள் முற்றிலும் சேதமானது. இந்நிலையில் யானைகள் வயல் மற்றும் தோப்புகளில் வந்து சேதம் விளைவிப்பது கவலையைத் தருவதாகவும், ஒட்டன்சத்திரம் வனத்துறையினா் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கவும், வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க அகழி அமைக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com