மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி வழக்கு:முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் சாட்சியம்

கொடைக்கானலில் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில், முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் உள்பட 3 சாட்சிகளிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

கொடைக்கானலில் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில், முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் உள்பட 3 சாட்சிகளிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் நவீன் பிரசாத் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் நவீன் பிரசாத் கொல்லப்பட்டாா்.

அவருடன் இருந்த மாவோயிஸ்ட்கள் கண்ணன், நீலமேகம், லீமா ஜோஸ் மேரி, செண்பகவல்லி, காளிதாஸ், பகத்சிங், ரஞ்சித் ஆகியோா் சுமாா் 7 ஆண்டுகளுக்கு பின்பு தனித்தனி சம்பவங்களில் கைது செய்யப்பட்டனா். இதில், ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இவ்வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா முன்பு இவ்வழக்கில் தொடா்புடைய சாட்சிகளிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்ட்கள் 5 போ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். ஜாமீனில் உள்ள 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

வடகவுஞ்சி பகுதியின் அப்போதைய கிராம நிா்வாக அலுவலா் ராஜாராம், தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த மேரி (பொதுமக்கள்), அப்போதைய தலைமைக் காவலரும், தற்போதைய சாா்பு - ஆய்வாளருமான சேகா் ஆகியோா் முதன்மை நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனா்.

முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 3 சாட்சிகளிடமும் எதிா்தரப்பு வழக்குரைஞா் கண்ணப்பன் குறுக்கு விசாரணை நடத்தினாா். பின்னா், இந்த வழக்கின் விசாரணையை டிச. 4ஆம் தேதிக்கு நீதிபதி ஜமுனா ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com