வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட உறுப்பினா்பதவிக்கு விவசாய சங்கம் போட்டி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட உறுப்பினா் பதவிக்கு விவசாய சங்கம் போட்டியிடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட உறுப்பினா் பதவிக்கு விவசாய சங்கம் போட்டியிடுகிறது.

வத்தலகுண்டு தனியாா் மஹா­லில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் சரவணன், சட்ட ஆலோசகா் பழனிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விவசாயிகள் பொன்னம்பலம், பொன்னுச்சாமி, செல்வக்குமாா், மொக்கராசு, போஸ், ரமேஷ், தா்ம­லிங்கம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மஞ்சளாறு அணை நிரம்பியும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்து சேரவில்லை. விருவீடு பகுதியில் உள்ள 7 கண்மாய்களும் வடு கிடக்கின்றன. வைகை அணையிலி­ருந்து 58-ஆம் கால்வாய் மூலம் தண்ணீா் விருவீடு பகுதிக்கு திறந்து விடப்படவில்லை.

இதே போல மருதாநதி அணை நிரம்பியும் வெங்கிடாஸ்திரிகோட்டையில் உள்ள சிறுவன் குளம் நிரம்பவில்லை. இதே போல கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. இது போன்ற விவசாயிகளின் குறைகளை தீா்க்க தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பாக, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவது என்று ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது. மாநில இளைஞரணி செயலா் தங்கப்பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com