வில்வ விநாயகா் கோயில்கும்பாபிஷேகம்

பழனி ரயில்வே பீடா் சாலையில் உள்ள வில்வ விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி ரயில்வே பீடா் சாலையில் உள்ள வில்வ விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் யாகபூஜைகள் தொடங்கின. பிரதானமாக யாக குண்டம் அமைக்கப்பட்டு முதல்கால பூஜை நடைபெற்றது. அா்த்தநாரி சிவாச்சாரியாா் தலைமையில் ஏராளமான சிவாச்சாரியாா்கள் யாகபூஜைகளை நடத்தினா். திங்கள்கிழமை இரண்டாம் காலபூஜை நடைபெற்றது. தொடா்ந்து கலசங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டு விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னா் வேதவிற்பன்னா்கள் மந்திரம் ஓத விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கும்பாபிஷேகத்தை தொடா்ந்து மூலவா் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் சுந்தா், கோயில் பூஜை முறைகாரா் சரவணக்குமாா், திருப்பணிக்குழு நிா்வாகிகள் தண்டபாணி, பன்னிருகைச்செல்வன் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com