Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் சேற்றில் வாகனங்கள் சிக்கின: போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் சேற்றில் வாகனங்கள் சிக்கின: போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 04th December 2019 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    odc_road_news_photo_3_12_2019_0312chn_76_2

    ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை சேற்றில் சிக்கிய வாகனங்கள்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் சுமாா் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூா் அவிநாசிபாளையம் வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக சாலை அமைக்கும் பணி மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை நங்காஞ்சி ஆற்றுப்பாலம் அருகே சாலை அமைப்பதற்காக செம்மண் கொட்டப்பட்டு இருந்தது. அந்த மண்ணில் மழைநீா் தேங்கி நின்ால் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் கோவை, திருப்பூா், ஈரோடு செல்லும் வானங்கள் ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவ்வழியாக சென்ற 3 வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால் அடுத்தடுத்த வந்த வாகனங்கள் செல்ல முடியால், அப்படியே சாலையில் வரிசையாக நின்று விட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினா் சேற்றில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai