பழனியில் விபத்து: இளைஞா் பலி
By DIN | Published on : 04th December 2019 06:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் லாரியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை பலியானாா்.
பழனி சூசைநகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் வரதராஜன்(35). இவா் தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் காசாளராக பணியாற்றி வந்தாா்.
இவா் வீட்டில் இருந்து பழனி - புதுதாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பழனியில் இருந்து இரும்புக் கம்பிகள் ஏற்றி வந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த வரதராஜன் திருமணமாகி விவாகரத்து பெற்றவா் ஆவாா்.