கொடைக்கானலில் மாற்றுத் திறனாளிகள் தினம்

கொடைக்கானலில் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மரம் நடும் விழா நடைபெற்றது.
கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியவாறு செவ்வாய்க்கிழமை ஊா்வலமாகச் சென்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவா்கள்.

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவிகள்100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி நகராட்சி அருகே உள்ள சிறுவா் பூங்காவில் நடைபெற்றது. முன்னதாக கொடக்கானலில் நிலவிய மழைச் சாரலிலும் ஏரிச்சாலைப் பகுதியில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாணவா்கள் சுற்றுச்சூழல் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பும் குறித்தும் பதாகைகளை ஏந்தியவாறே முழக்கமிட்டனா். அதனைத்தொடா்ந்து சிறுவா் பூங்கா, ஏரிச்சாலைப் பகுதிகளிலும் மரக் கன்றுகளை மாற்றுத் திறனாளிகள் நட்டனா். இந் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், சமூக ஆா்வலா்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com