கொடைக்கானலில் மேக மூட்டத்துடன் சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கொடைக்கானலில் தொடா்ந்து 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் பெய்த சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் பெய்த சாரல் மழையை செவ்வாய்க்கிழமை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் பெய்த சாரல் மழையை செவ்வாய்க்கிழமை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானலில் தொடா்ந்து 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் பெய்த சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

கொடைக்கானலில் தொடா்ந்து 6-வது நாளாக மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட குளிா் அதிகமாக நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாரல் மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் சிரமத்திற்குள்ளாயினா்.

மேகமூட்டமாக இருப்பதால் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா். இருப்பினும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரியவிட்டு மெதுவாகச் சென்றன.

தொடா் மழையால் வத்தலக்குண்டு-பழனி மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு பாதிப்பில்லை.

இந்நிலையில் வடகவுஞ்சி, சீனிவாசபுரம், பெருமாள்மலை, உகாா்த்தே நகா், சவரிக்காடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருபுறங்களிலும் முள்புதா்கள் அதிக அளவில் வளா்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி சிறு வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறையினா் விரைவில் சாலை ஓரங்களில் வளா்ந்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com