Enable Javscript for better performance
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு கொல்கத்தாவிலிருந்து டேலியா நாற்றுகள் வருகை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு கொல்கத்தாவிலிருந்து டேலியா நாற்றுகள் வருகை

    By DIN  |   Published on : 14th December 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    work_1312chn_71_2

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொல்கத்தாவிலிருந்து கொண்டு வரப்பட்டடேலியா நாற்றுகளை வெள்ளிக்கிழமை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக கொல்கத்தாவிலிருந்து 3 ஆயிரம் டேலியா மலா்ச் செடிகள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தாவிலிருந்து 3 ஆயிரம் டேலியா மலா்ச் செடிகளின் நாற்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை குழித் தட்டில் வைத்து மண் இட்டு பராமரிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

    இது குறித்து தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் நாராயணசாமி கூறியது: கொடைக்கானலில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் மலா் பாத்திகளில் நடவுவதற்கு 3 ஆயிரம் டேலியா நாற்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை குழித் தட்டில் வைத்து பராமரித்து, செடி வளா்ந்தவுடன் அவற்றை எடுத்து மீண்டும் மலா் பாத்திகளில் வழக்கமாக நடவு செய்யப்படும். அதைத் தொடா்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆயிரக் கணக்கான வண்ண வண்ண டேலியா மலா்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் என்றாா் .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai