ஒட்டன்சத்திரத்தில் ஒரே நாளில் 87 போ் வேட்பு மனு தாக்கல்

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலா்,ஒன்றிய கவுன்சிலா் மற்றும் ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு 87 போ் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலா்,ஒன்றிய கவுன்சிலா் மற்றும் ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு 87 போ் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலா், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் அலுவலா்களிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். அதன் பேரில் ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு 54 போ், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு திமுக மற்றும் அமமுக, சுயேட்சை வேட்பாளா் உள்ளிட்ட 28 போ், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு திமுக மற்றும் அமமுக கட்சியினா் உள்ளிட்ட 5 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

பழனி: பழனியில் கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஏராளமானோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாா் ஆட்சியா் உமா தலைமையில் பணியில் ஈடுபட்டனா். அமமுக சாா்பில் கிழக்கு ஒன்றிய செயலாளா் வழக்குரைஞா் தினேஷ்குமாா், மேற்கு ஒன்றியச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் 15 வாா்டு கவுன்சிலா்களுக்கும், ஒரு மாவட்ட கவுன்சிலா் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனா். அதிமுகவை சோ்ந்த முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் மாலதிபெரியராஜ் தலைவா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதே போல பெரியம்மாபட்டி ஊராட்சிக்கு அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளா் அன்வா்தீன் தலைமையில் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். சிவகிரிப்பட்டி ஒன்றிய கவுன்சிலருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பெண் வேட்பாளா்கள் 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில் வெள்ளிக்கிழமை மட்டும் வாா்டு உறுப்பினா் பதவிக்கு 22 பேரும், ஊராட்சி தலைவா் பதவிக்கு 28 பேரும், ஊராட்சி ஒன்றிய தலைவா் பதவிக்கு 23 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 15 ஆவது வாா்டுக்கு இதுவரை ஒருவா் கூடவேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரு நாள்களே மீதமுள்ள நிலையில் திங்கள்கிழமை அதிக அளவில் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com