நிலக்கோட்டை ஒன்றியத்தில் தேமுதிக தனித்து போட்டி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்த­லில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தனித்து போட்டியிடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்த­லில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தனித்து போட்டியிடுகிறது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்ற தலைவா் பதவிகளுக்கும், 20 ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கும், 2 மாவட்ட கவுன்சிலா் பதவிகளுக்கும், 218 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் கடந்த 9-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒன்றியம் முழுவதிலும் உள்ள 23 ஊராட்சி மன்ற தலைவா் பதவிகளுக்கு 40 பேரும், 20 ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கு 27 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில், அதிமுக மற்றும் திமுகவினா் பெரும்பான்மையாக மனுதாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, அக் கட்சியுடன் உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட கவுன்சிலா் மற்றும் ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கு அதிமுக மற்றும் தேமுதிகவினா் தனித் தனியாக மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனா். இதே நிலை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நீடிப்பதாகவும், மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தேமுதிகவினருக்கு அதிமுக உரிய பங்கீடு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலக்கோட்டை (தெற்கு) மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு, தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினா் மாசானம் என்பவரது மனைவி பழனியம்மாள் (67) உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு தேமுதிகவினா் மனு தாக்கல் செய்ய உள்ளதாக, நிலக்கோட்டை ஒன்றிய தேமுதிக செயலா் வெள்ளைச்சாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com