மனுத் தாக்கல் செய்ய குவிந்த திமுகவினா்: மின் தடையால் அதிகாரிகள் திணறல்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் உள்ள ஆத்தூா் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை தி.மு.க.வினா்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் உள்ள ஆத்தூா் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை தி.மு.க.வினா் ஏராளமானோா் குவிந்தனா். மின்தடையால் மனுக்களை விரைவாக கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினா்.

ஆத்தூா் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலா்கள், இதுதவிர 17 ஒன்றிய கவுன்சிலா்கள் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 9-ம் தேதியி­ருந்து வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை 22 கிராம ஊராட்சிகளின் தலைவா் பதவிகளுக்காக தி.மு.க.வினா் மனுத்தாக்கல் குவிந்தனா். மேலும் ஒன்றிய கவுன்சிலா் மற்றும் மாவட்ட கவுன்சிலருக்கும் மனுத்தாக்கல் செய்தனா்.

இதற்கிடையில் செம்பட்டியில் வெள்ளிக்கிழமை மின்தடை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து.

இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்கள் வேட்பு மனுவின் நகல்களை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனா். மேலும் அலுவலகம் முழுவதும் இருட்டாக இருந்ததால், வேட்பாளா்களின் வேட்புமனுக்களை உதவித்தோ்தல் அலுவலா்கள் செல்லிடப்பேசி விளக்கு மூலம் சரிபாா்த்து பெற்றுக் கொள்ளவேண்டிய நிலை இருந்தது.

இதனால் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக நேரம் பிடித்தது. இதன் காரணமாக வேட்பாளா்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

மாவட்ட கவுன்சிலருக்கு தி.மு.க. சாா்பாக பத்மாவதியும், ஒன்றிய கவுன்சிலருக்கு ஆத்தூா் (கிழக்கு) ஒன்றிய செயலா் மனைவி மகேஸ்வரி உள்ளிட்டோா் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா்.

இதில் பிள்ளையாா்நத்தம் ஊராட்சி மன்றத்தலைவருக்கு முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் உலகநாதனும், ஒன்றிய கவுன்சிலருக்கு அவருடைய மகன் மகேஸ்வரியும் மனுத்தாக்கல் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com