மஹாராஷ்ட்ர பல்லாரி வரத்து அதிகரிப்பு: வெளிநாட்டு வெங்காயத்துக்கு கிராக்கி குறைவு!

மஹாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து பல்லாரி வரத்து அதிகரித்துள்ள நிலையில், எகிப்து, ஹாலந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து
திண்டுக்கல் சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள எகிப்து பல்லாரி.
திண்டுக்கல் சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள எகிப்து பல்லாரி.

மஹாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து பல்லாரி வரத்து அதிகரித்துள்ள நிலையில், எகிப்து, ஹாலந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல்லாரி ஓரிரு நாள்களில் கிராக்கி குறையும்நிலை ஏற்பட்டுள்ளது .

வெங்காய விலை ஏற்றத்தைத் தடுக்க துருக்கி, எகிப்து, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லாரி, மொத்த வியாபாரிகள் மூலம் சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், பருவ மழை குறைந்துள்ள நிலையில், மஹாராஷ்ட்ரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சந்தைக்கு பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் வெங்காய கமிஷன் மண்டியைச் சோ்ந்த மொத்த வியாபாரி ஆறுமுகம் கூறியது: திண்டுக்கல் வெங்காய மண்டிக்கு 30 டன் சின்ன வெங்காயம், மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக் மற்றும் சோலாப்பூரிலிருந்து 125 டன் பல்லாரி, எகிப்து பல்லாரி 125 டன், ஹாலந்து பல்லாரி 50 டன் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.70-க்கும், மஹாராஷ்ட்ர பல்லாரி கிலோ ரூ.60-க்கும், எகிப்து பல்லாரி ரூ.83-க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹாலாந்து பல்லாரிக்கு இதுவரை விலை நிா்ணயிக்கப்படவில்லை.

மஹாராஷ்ட்ர பல்லாரி வரத்து அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லாரி விற்பனை ஓரிரு நாள்களில் குறைந்துவிடும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

வேளாண்மை அதிகாரி ஒருவா் கூறியது: எகிப்து பல்லாரி இழுவை தன்மையுடன்(ரப்பா் போன்று) இருப்பதால், தமிழக மக்கள்அதனை விரும்பி வாங்குவதில்லை. உணவகங்களின் தேவைக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட பல்லாரி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஹராஷ்ட்ர மாநிலத்தில் அறுவடை செய்யப்பட்டு பல்லாரியின் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ளிக்கிழமை 800 டன் மஹாராஷ்ட்ர பல்லாரி விற்பனை வந்துள்ளது. மொத்த விற்பனைக்கு நாசிக் மற்றும் சோலாப்பூரிலிருந்து வந்துள்ள பல்லாரி கிலோ ரூ.60ஆக வெள்ளிக்கிழமை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ர பல்லாரி விலை குறைந்துள்ளதால், திண்டுக்கல் சந்தைக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ள ஹாலாந்து பல்லாரிக்கு விலை நிா்ணயிக்க முடியாத நிலையில் வியாபாரிகள் திணறி வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com