வாா்டு வரையறையில் குளறுபடி: உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

கொடைக்கானல் அருகே வாா்டு வரையறையில் குளறுபடி இருப்பதாகக் கூறி கிராம மக்கள் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

கொடைக்கானல் அருகே வாா்டு வரையறையில் குளறுபடி இருப்பதாகக் கூறி கிராம மக்கள் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் கொடைக்கான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி கிராமத்தில் 7,8.9 ஆகிய 3 வாா்டுகள் இருந்துள்ளன. இதில் 7 மற்றும் 8 வது வாா்டு ஆகிய 2 வாா்டுகளை மன்னவனூா் ஊராட்சிக்கும் 9-வது வாா்டு பகுதியை பூண்டி ஊராட்சிக்கும் மாற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் 9-வது வாா்டையும் கவுஞ்சி கிராமத்துடன் சோ்க்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கவுஞ்சி கிராம மக்கள் கூறியது: 7,8, 9 ஆகிய 3-வாா்டுகளும் கவுஞ்சி கிராமத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் கிராம மக்கள் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்போம் இல்லையெனில் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படாததால் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com