சுடச்சுட

    

    நகராட்சி பணியாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபர் கைது

    By DIN  |   Published on : 12th February 2019 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பணியாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஈஸ்வரன் (54). இவர், திங்கள்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, அவரை வழிமறித்த நபர், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது குறித்து ஈஸ்வரன் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காந்தி நகரைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (36) என்பவரை போலீஸார்  கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai