விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை 2.06 லட்சம் பேர் பயன்பெறுவர்: ஆட்சியர்

விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 2.06 லட்சம்

விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 2.06 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என, மாவட்ட ஆட்சியர் டிஜி. வினய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள சிறு, குறு விவசாயிகளை கணக்கீடு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவான சிறு, குறு விவசாயிகள் 2.06 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். 
விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான ஆவணங்களின்படி, அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் எனத் 
தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com