சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.15 கோடியில்  சாலைப் பணிகள் தீவிரம்

    By DIN  |   Published on : 13th February 2019 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.15 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
     ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள தும்மிச்சம்பட்டி சாலை, பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, கே.கே.நகர் சாலை, அண்ணா நகர் சாலை உள்ளிட்ட சாலைகள் பழுதடைந்து குண்டு, குழியுமாக உள்ளன.
     இச்சாலைகளை சீரமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2018-19-ஆம் ஆண்டு  நிதியில் இருந்து ரூ.15 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai