சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்கள்: கொடைக்கானலில் மாணவர்களுக்கு வரவேற்பு

கராத்தே போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்று, கொடைக்கானல் திரும்பிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.

கராத்தே போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்று, கொடைக்கானல் திரும்பிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.
     கடந்த 2 நாள்களாக, ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில், கொடைக்கானல் நாயுடுபுரம், ஆனந்தகிரி, அட்டுவம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8 பேர் பங்கேற்றனர். 12 மற்றும் 14 வயதுக்குள்பட்ட பிரிவு போட்டியில், கொடைக்கானலைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெங்கலப் பதக்கங்களை வென்றனர்.    அதையடுத்து, கொடைக்கானல் திரும்பிய இம்மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் ஊட்டி வரவேற்றனர்.
     இது குறித்து கராத்தே மாஸ்டர் சக்திவேல் கூறியது: ஊட்டியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் இலங்கை, பூடான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.     இதில், கொடைக்கானல் மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com